கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம்

 தருமபுரி, ஜன. 8: வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வழக்கறிஞர் எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தருமபுரியில் சனிக்கிழமை நடந்த சங்க மாநிலப் பொதுக்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

 தருமபுரி, ஜன. 8: வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வழக்கறிஞர் எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 தருமபுரியில் சனிக்கிழமை நடந்த சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத் தலைவர் எஸ்.கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். எம்பி இரா.தாமரைச்செல்வன் பேசுகையில், வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேமநல நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.

 தமிழ்நாடு வழக்கறிஞர் எழுத்தர்களின் நலநிதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் சேம நலநிதிவாரியத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். திட்ட நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 2 உறுப்பினர்களை நியமிக்க பார் கவுன்சில், தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

 கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதைப் போன்று தமிழகத்திலும் வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மாநிலப் பொதுச்செயலர் எஸ்.பாண்டி, மாநிலப் பொருளாளர் ஐ.தேவராஜன், வருவான் வடிவேலன் கல்வி நிறுவனங்கள் தலைவர் எம்.வடிவேலன், எம்எல்ஏ இல.வேலுசாமி, சங்க மாவட்ட செயலர் கே.மாது, மாவட்ட தலைவர் கே.பி.நேரு உள்ளிட்ட பலர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.