"புத்த மார்க்கத்தை அம்பேத்கருக்கு பரிந்துரைத்தவர் அப்பாதுரையார்'

கோலார் தங்கவயல், பிப்.27: சாதியை ஒழிக்க புத்தமார்க்கத்தில் இணைவது தான் சிறந்தது என அம்பேத்கருக்கு வழிகாட்டியவர் பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் என்று அறிஞர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ÷கோலார் தங்கவயலில் திங
Updated on
1 min read

கோலார் தங்கவயல், பிப்.27: சாதியை ஒழிக்க புத்தமார்க்கத்தில் இணைவது தான் சிறந்தது என அம்பேத்கருக்கு வழிகாட்டியவர் பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் என்று அறிஞர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

÷கோலார் தங்கவயலில் திங்கள்கிழமை தங்கவயல் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பண்டிதமணி ஜி.அப்பாதுரையாரின் 42-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜி.அப்பாதுரையார் படத்தை பேராசிரியர் கிருஷ்ணகுமார் திறந்துவைத்தார்.

÷நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் கலையரசன் தலைமையேற்க, வழக்குரைஞர் திருவரங்கம் வரவேற்றுப் பேசினார். சங்க பிரதிநிதிகள் அன்பரசன், இராமலிங்கம், வங்கி கிருஷ்ணமூர்த்தி, வாசுதேவன், வின்சென்ட் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

÷நிகழ்ச்சியில் கிருஷ்ணகுமார் பேசியது:

÷பகுத்தறிவுப் பிரசாரம் தமிழகத்தில் வேர்விடுவதற்கு முன்பே அப்பணி கோலார் தங்கவயலில் தொடங்கிவிட்டன. சாதி ஒழிப்பு, பகுத்தறிவு பிரசாரம் போன்றவை தங்கவயலில் பயிரிடப்பட்டவை. எம்.ஒய்.முருகேசனார், புலவர் பெரியசாமி, புலவர் அய்யாக்கண்ணு, பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் போன்ற வரலாற்று நாயகர்கள் தான் கோலார் தங்கவயலில் சாதி ஒழிப்புப்பணியில் முனைப்பாக செயல்பட்டனர்.

÷சாதியை வேரறுக்க வேண்டுமானால் அதற்கு புத்தமார்க்கம்தான் சிறந்த மருந்து என்று கண்டறிந்து, தங்கவயலில் புத்தமார்க்கத்தைப் பரப்பினார்கள். பெரியார், அம்பேத்கர் ஆகியோருடன் நெருக்கமாக இருந்த அப்பாதுரையார், சாதி ஒழிப்பில் முன்னோடியாக செயல்பட்டுள்ளார். பெரியார் நடத்திய மாநாடுகளில் கலந்து கொண்டு சாதி ஒழிப்புக்கு தேவையான கருத்துரைகளை வழங்கியுள்ளார்.

அப்பாதுரையாரின் வழிகாட்டுதலுக்கு இணங்கியே புத்தமார்க்கத்தில் அம்பேத்கர் தன்னை இணைந்துக் கொண்டார். சாதியை ஒழிப்பதற்கு புத்தமார்க்கம் தான் சரியான வழி என்பதை அம்பேத்கருக்கு உணர்த்தியவர் அப்பாதுரையார் தான். இதை வரலாற்று ஆராய்ச்சியாளர் தனஞ்செய் கீர் எழுதியுள்ள அம்பேத்கரின் சிந்தனைகள் என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com