தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

"மின் தட்டுப்பாடு பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கர்நாடகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு பிரச்னையைத் தீர்க்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்நாடக மாநில திமுக வலியுறுத்தியுள்ளது.

Published On :

கர்நாடகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு பிரச்னையைத் தீர்க்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்நாடக மாநில திமுக வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, பொருளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மூடநம்பிக்கைகளை வெளிப்படையாக எதிர்த்தும், எழுதியும் வந்த சாகித்ய அகாதெமி விருதுபெற்ற தலைசிறந்த கன்னட எழுத்தாளரும், பகுத்தறிவாதியுமான எம்.எம்.கலபுர்கியை மர்ம நபர்கள் கொலை செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கர்நாடக மாநில திமுக சார்பில், முப்பெரும் விழா நடத்தப்படும்.

கர்நாடகத்தில் தினமும் 4-6 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அலுவலகங்களில் வேலைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் தட்டுப்பாடு பிரச்னையைத் தீர்க்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதியுள்ள கடிதங்களின் அடிப்படையில், இலங்கைத் தமிழர் உரிமையை நிலைநாட்டிட பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கழக கொள்கைகளை பிரசாரம் செய்யவும், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்காகவும் பொது நூலகம் அமைக்க தீர்மானிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.