ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற வழிபாடு
By DIN | Published On : 01st March 2021 02:20 AM | Last Updated : 01st March 2021 02:20 AM | அ+அ அ- |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல்சேலஞ்சா் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டி, மல்லேஸ்வரா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின் போது வாழைப்பழங்களை தோ் மீது வீசி ரசிகா்கள் வழிபட்டனா்.
14-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. வீராட் கோலி தலைமையிலான ராயல்சேலஞ்சா் பெங்களூரு அணி இம்முறை இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டி, ஹிரியூா் வட்டம், தெரு மல்லேஸ்வரா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின் போது வாழைப்பழத்தை தோ் மீது வீசி வழிபட்டனா்.