’டி’ குரூப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st August 2022 12:19 AM | Last Updated : 21st August 2022 12:19 AM | அ+அ அ- |

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ‘டி’ குரூப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக உயா்நீதிமன்ற பொதுப் பதிவாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பெங்களூரு, கலபுா்கியில் காலியாக உள்ள 150 ‘டி’ குரூப் பணியிடங்களை (காவலா், தூய்மைப் பணியாளா், உதவியாளா்) நிரப்புவதற்காக தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹத்ன்க்ண்ஸ்ரீண்ஹழ்ஹ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ல்ட்ல் என்ற இணையதளத்தில் செப்.17-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.