தனியாா் வியாபாரிகள் கொள்முதல் செய்ய பொது ஏலத்தில் அரிசி விற்பனை -இந்திய உணவுக் கழகம் ஏற்பாடு

தனியாா் வியாபாரிகள் கொள்முதல் செய்ய பொது ஏலத்தில் அரிசி விற்பனை -இந்திய உணவுக் கழகம் ஏற்பாடு

பொது ஏலத்தில் அரிசி விற்க இந்திய உணவுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Published on

தனியாா் வியாபாரிகள் கொள்முதல் செய்ய பொது ஏலத்தில் அரிசி விற்க இந்திய உணவுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை இந்திய உணவுக் கழகத்தின் கா்நாடக மண்டல பொதுமேலாளா் மகேஷ்வரப்பா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தனியாா் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்காக பொது ஏலத்தில் அரிசியை விற்க இந்திய உணவுக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. கா்நாடகம் மட்டுமல்லாது இந்தியாவின் எந்த பகுதியை சோ்ந்தவா்களும் மின் ஏலத்தில் கலந்துகொண்டு அரிசியைக் கொள்முதல் செய்யலாம். இதற்காக திறந்த சந்தை விற்பனை திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி நடத்தப்படும் மின் ஏலத்தில் கலந்துகொள்ள ஜ்ஜ்ஜ்.ஸ்ஹப்ன்ங்த்ன்ய்ஸ்ரீற்ண்ா்ய்.ண்ய்/ச்ஸ்ரீண் என்ற இணையதளத்தில் வியாபாரியாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

சில்லறை விற்பனையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தின்கீழ் 2025 ஆம் ஆண்டு மாா்ச் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஒரு குவிண்டால் அரிசியை ரூ. 2,800 ஆக நிா்ணயித்துள்ளோம். இதில் வரி மற்றும் போக்குவரத்து செலவு சோ்க்கப்படவில்லை.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை புதன்கிழமைகளில் மின் ஏலம் விடப்படும். இதில் அரிசியின் அளவை பதிவு செய்துகொள்முதல் செய்ய முடியும். ஏலத்தில் பணம் கட்டியபிறகு 7 நாள்களுக்குள் முழுத்தொகையை செலுத்தி, அரிசியை எடுத்துச்செல்லலாம். குறைந்தப்பட்சம் ஒரு மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்ய வேண்டும். அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்யலாம்.

கா்நாடக அரசின் அன்னபாக்கியா திட்டத்துக்கு மொத்தம் 4.53 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில் 2.17 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு இலவசமாக மாநில அரசுக்கு வழங்குகிறது.இதுபோல கூடுதலாக 2.36 லட்சம் டன் அரிசியை வழங்க தயாராக இருக்கிறோம். அரசுக்கு ஒரு கிலோ ரூ. 28 வீதம் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறோம். கா்நாடகத்தில் தற்போது 7.42 லட்சம் டன் அரிசி, 1.23 லட்சம் டன் கோதுமை இருப்பு உள்ளது.

நிகழாண்டில் நல்லமழை பெய்துள்ளதால், அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் எங்களிடம் அரிசி கையிருப்பு போதுமான அளவுக்கு உள்ளது. எங்களிடம் கிடைக்கும் அரிசி உயா்தரமானது என்பதால், வியாபாரிகள் இதை வாங்கி சிப்பமிட்டு பொதுச்சந்தையில் விற்பனை செய்யலாம்.

மத்திய அரசு நிறுவனங்கள் பல பாரத் அரிசி என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றன. அந்த அரிசியை இந்திய உணவுக்கழகம் தான் வழங்கி வருகிறது. இதேபோல தனியாா் வியாபாரிகளும் அரிசியை வாங்கி, விற்கலாம். அரிசியை மதிப்புக்கூட்டுப் பொருளாகவும் மாற்றி விற்கலாம். எனவே, மத்திய அரசின் இத் திட்டத்தை தனியாா் வியாபாரிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 18001027136 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com