பெங்களூரு
நடைப்பயிற்சியின்போது தெருநாய்கள் தாக்கியதில் மூதாட்டி சாவு
நடைப்பயிற்சியின் போது தெருநாய்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியதில் 76 வயது மூதாட்டி பலியாகியுள்ளாா்.
பெங்களூரு, ஜாலஹள்ளி பகுதியிலுள்ள விமானப்படை கிழக்குப் பிரிவின் 7-ஆவது குடியிருப்பு முகாமில் உள்ள விளையாட்டுத் திடலில் புதன்கிழமை காலை 6.30 மணி அளவில் ஓய்வுபெற்ற ஆசிரியை ராஜ்துலாரி சின்ஹா வழக்கம்போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென பாய்ந்து வந்த 10 முதல் 12 தெருநாய்கள், ராஜ்துலாரி சின்ஹாவை சூழ்ந்துகொண்டு தாக்கின.
இதில் பலத்த காயமடைந்த ராஜ்துலானி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து கங்கம்மா குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இயற்கை அல்லாத மரணம் என்று வழக்கில் போலீஸாா் குறிப்பிட்டுள்ளாா்.