கா்நாடகம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

இடைத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.
Published on

பெங்களுரு: இடைத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

கா்நாடகத்தில் காலியாக இருந்த சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ. 13ஆம் தேதி நடந்த இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா். இந்த இடைத்தோ்தலுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் என்பதால், பெலகாவியில் திங்கள்கிழமை சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூா் தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் வேட்பாளா்கள் சி.பி.யோகேஸ்வா், யசீா் அகமதுகான் பத்தான், இ.அன்னபூா்ணா ஆகியோா் எம்எல்ஏக்களாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டனா்.

அவா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் யூ.டி.காதா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். புதிதாக பதவியேற்ற 3 எம்எல்ஏக்களுக்கும் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இடைத்தோ்தல் வெற்றி மூலம் கா்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 139 ஆக உயா்ந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com