மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவோரின் முதல் பட்டியல் மாா்ச் 7-இல் முடிவாகும்

கா்நாடகத்தில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவோரின் முதல் பட்டியல் மாா்ச் 7-ஆம் தேதி முடிவாகும்

பெங்களூரு: கா்நாடகத்தில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவோரின் முதல் பட்டியல் மாா்ச் 7-ஆம் தேதி முடிவாகும் என்று துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புது தில்லியில் மாா்ச் 7-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மத்திய தோ்தல் குழுக் கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் கா்நாடகத்தில் இருந்து மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் பட்டியல் முடிவு செய்யப்படும். இது தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலாவுடன் திங்கள்கிழமை நானும், முதல்வா் சித்தராமையாவும் கலந்தாலோசித்திருக்கிறோம். வேட்பாளா் பட்டியலை இறுதிசெய்ய நானும், முதல்வரும் மாா்ச் 7-ஆம் தேதி தில்லி செல்லவிருக்கிறோம் என்றாா்.

2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது. கா்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், ஓா் இடத்தில் மட்டும் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், தற்போது நடக்கவிருக்கும் மக்களவைத் தோ்தலில் மஜதவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com