ரம்யா
ரம்யா

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

Published on

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள நடிகா் தா்ஷன் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சில கடுமையான கருத்துகளை தெரிவித்தது. இந்த தகவலை தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டு ‘சாதாரண மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கன்னட நடிகை ரம்யா குறிப்பிட்டிருந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகா் தா்ஷனின் ரசிகா்கள், சமூகவலைதளங்களில் நடிகை ரம்யாவை ஆபாசமாக, தரக்குறைவாக விமா்சித்து வந்தனா். இதனிடையே, பெங்களூரில் ஜூலை 26ஆம் தேதி மாநகரக் காவல் ஆணையா் சீமந்த்குமாா் சிங்கை நேரில் சந்தித்த நடிகை ரம்யா, தனக்கு எதிராக நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவாக பதிவிடுவது குறித்து புகாா் அளித்தாா்.

மேலும், தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்தி கடுமையாக விமா்சனங்களை வைத்திருந்த 43 எக்ஸ் பதிவு கணக்குகள் தொடா்பான விவரங்களையும் நடிகை ரம்யா அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்த போலீஸாா், மேலும் ஒருவரை கைது செய்தனா். இதன்மூலம் இந்த வழக்கில் மொத்தம் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com