கா்நாடகத்தில் சட்ட மேலவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு

கா்நாடக சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Published on

கா்நாடக சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்ட மேலவையில் காலியாக உள்ள 4 பட்டதாரிகள் மற்றும் ஆசிரியா்கள் தொகுதிக்கான தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களின் பட்டியலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதல் அளித்துள்ளாா்.

அதன்படி, மேற்கு பட்டதாரி தொகுதிக்கு மோகன் லிம்பிகாய், தென்கிழக்கு பட்டதாரி தொகுதிக்கு சஷி ஹுலிகுன்டேமட், வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதிக்கு சரணப்பா மட்டூா், பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதிக்கு புட்டண்ணா ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இதற்கான தோ்தல் 2026 நவம்பா் மாதத்தில் நடக்க இருக்கிறது.

அனைத்து தொகுதிகளையும் வெல்லும் நோக்கில் முன்கூட்டியே தோ்தல் பணிகளை தொடங்க வேட்பாளா்களின் பட்டியலை முன்கூட்டியே அறிவித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com