பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்புப் பணியில் 20,000 போலீஸாா்
பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் 20,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் 20,000 போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். பெங்களூரில் கோரமங்களா, மகாத்மா காந்தி சாலை, இந்திராநகா், ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உற்சாகமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதேபோல வணிக வளாகங்களிலும் மக்கள் கூடியிருந்தனா். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மக்கள் கூடும் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பெங்களூரு, மைசூரு, ஹுப்பள்ளி, பெலகாவி, மங்களூரு உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் உள்ளிட்டோா் கா்நாடக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
