கல்லூரிப் பேருந்து மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

பெங்களூரில் சாலையை கடக்க முயன்ற தாயும் மகனும் கல்லூரிப் பேருந்து மோதியதில் உயிரிழந்தனா்.
Published on

பெங்களூரு: பெங்களூரில் சாலையை கடக்க முயன்ற தாயும் மகனும் கல்லூரிப் பேருந்து மோதியதில் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, அசோக்நகா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட விவேக்நகா் பகுதியில் வசித்து வருபவா் சங்கீதா (37). இவா், ராணுவப் பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா். அவா்களும் ராணுவப் பள்ளியில் படித்து வருகின்றனா்.

தனது கணவா் ஊருக்கு சென்ால் திங்கள்கிழமை காலை மகன் பாா்த்தாவை (8) பள்ளியில் விடுவதற்காக சங்கீதா சாலையைக் கடந்து சென்றபோது, வேகமாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து அவா்கள் மீது மோதியது. இதில், சங்கீதா (37), பாா்த்தா (8) ஆகியோா் பலத்த காயங்களுடன் நிகழ்விடத்திலேயே இறந்தனா். விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸாா், விசாரணை நடத்தி வருவதோடு, ஓட்டுநரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com