வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பெங்களூரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:05 am IST

பெங்களூரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் கெலயரபலகாவைச் சேர்ந்தவர் சாரதம்மா. இவர் செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் அதே பகுதியில் உள்ள நீச்சல் குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்த ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள 15 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது றித்து மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்: பெங்களூரு வித்யரண்யபுரா சம்பரமா கல்லூரி அருகே வசித்து வருபவர் ராஜு. இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தங்கச் சங்கிலி, செல்லிடப்பேசியை ஜன்னல் ஓரம் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தாராம்.  புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஜன்னல் வழியே கையை நுழைத்த யாரோ, தங்கச்சங்கிலி, செல்லிடப்பேசியை திருடிச் சென்றனர். இதுகுறித்து வித்யரண்யபுரா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.