மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

கலசபாக்கம் பகுதியில் இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2026, 6:53 am IST

கலசபாக்கம் பகுதியில் இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு செய்யாற்று பாலப் பகுதியில் திங்கள்கிழமை மாலை திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், வேலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் இருந்து 27 போ் காயமடைந்தனா். இதில், பலத்த காயமடைந்த போளூரை அடுத்த வசூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி சுலோச்சனா(80) (படம்) திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.