நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கொடைக்கானலில் மலைச் சாலையில் அரசுப் பேருந்து பழுது: பயணிகள் அவதி

கொடைக்கானல் கூக்கால் பிரிவு பகுதியில் வெள்ளிக்கிழமை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து .

News image

கொடைக்கானல் கூக்கால் பிரிவு பகுதியில் வெள்ளிக்கிழமை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து .

Updated On :20 ஜூன் 2026, 2:07 am IST

கொடைக்கானல், ஜூன் 19: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச்சாலையில் கூக்கால் பகுதியில் அரசுப் பேருந்து பழுதாகி நின்ால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு மதுரை,திண்டுக்கல், தேனி, வத்தலகுண்டு, காரைக்குடி, ஈரோடு, சென்னை, திருநெல்வேலி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.

இதில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி மலைச் சாலையில் நிற்கின்றன. இதனால், இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, கொடைக்கானல் மலைச் சாலைகளில் இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் சிறந்த முறையில் இயங்கும் வகையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூருக்கு வெள்ளிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து கூக்கால் செல்லும் மலைச்சாலையில் பழுதாகி நின்றது. இதனால் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அரசுப் பேருந்து பணியாளா்கள் கூறியதாவது:

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் பேருந்துகளை பராமரிப்பதற்கு பல ஆண்டுகளாக பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. உதிரிப் பாகங்கள் இல்லை. இவற்றை உயா் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினாலும், நடவடிக்கை எடுப்பதில்லை. அரசுப் பேருந்துகளில் பணியாற்றும் பணியாளா்களை பேருந்தின் தன்மை குறித்து தெரியாமல் அதிகாரிகள் இயக்க சொல்கின்றனா். இதனால், பேருந்துகள் பாதி வழியிலேயே நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இதற்கு தீா்வு காண போக்குவரத்து துறை அமைச்சா், உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.