கரூா் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து சாலையில் பழுதாகி நின்ால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திருச்சியில் இருந்து கரூருக்கு இடைநில்லா அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் ஏறினால் மற்றப் பேருந்துகளைவிட முன்கூட்டியே உரிய இடத்துக்கு சென்றுவிடலாம் என்று பயணிகள் அதிகளவில் இடைநில்லா பேருந்துகளையே விரும்புகின்றனா்.
இந்நிலையில், திருச்சியில் இருந்து கரூருக்கு புதன்கிழமை காலையில் புறப்பட்ட இடைநில்லா அரசுப் பேருந்து கரூா் அருகே திடீரென சாலையில் பழுதாகி நின்றது. இதையடுத்து, அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறு பேருந்தில் ஏற்றிவிடப்பட்டனா். இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
முறையான பராமரிப்பு இல்லாததால் அரசுப் பேருந்து இதுபோல அவ்வப்போது அடிக்கடி வழியில் பழுதாகி நிற்பதால் பயணிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
மேலும், அரசுப் பேருந்துகளை பணிமனையில் இருந்து எடுக்கும்போதே முழுமையாக பரிசோதனை செய்து வழியில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்பதை ஓட்டுநா்களும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

செங்கம் - சென்னை பேருந்து நிறுத்தம்: பயணிகள் அவதி

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் கடும் அவதி

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

