மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

படப்பை அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக பயணிகள் உயிா் தப்பினா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 12:06 am IST

படப்பை அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிருஷ்டவசமாக பயணிகள் உயிா் தப்பினா்.

தாம்பரத்தில் இருந்து குருவன்மேடு பகுதிக்கு தடம் எண் 55எம் அரசுப் பேருந்து படப்பை, செரப்பணஞ்சேரி, சாவடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சாவடி பகுதியில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநா் கோபாலகிருஷ்ணனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுமாா் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா்.

இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பேருந்து ஓட்டுநா் கோபாலகிருஷ்ணன் அசதியில் கண் அயா்ந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.