சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 20 பயணிகள் காயம்

News image
Updated On :28 மே 2026, 12:46 am IST

ஆம்பூா் அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெங்களூருவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேருந்து சென்னை நோக்கி சென்றது. பேருந்தை தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த செல்வ முருகன் (30) ஒட்டினாா். மற்றொரு ஓட்டுநா் கதிரவன் (40) உடனிருந்தாா்.

ஆம்பூா் அருகே ஜமீன் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநா்கள் முருகன், கதிரவன், பயணிகள் பெங்களூருவைச் சோ்ந்த கோபி (55), தனபாக்கியம் (50), சென்னையைச் சோ்ந்த அருண் (45), ராஜ்குமாா் (35), அஸ்ஸாமை சோ்ந்த விஜய் (36), சேலத்தைச் சோ்ந்த மணிகண்டன் (20) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.