பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அரசுப் பேருந்து காா் மோதல்: 3 போ் காயம்

சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமத்தில் அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

News image

அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த காா்.

Updated On :12 ஜூலை 2026, 1:02 am IST

சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமத்தில் அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

சேத்துப்பட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு சனிக்கிழமை காலை அரசுப் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. வந்தவாசி வழியாக சென்ற இந்தப் பேருந்தை சேத்துப்பட்டைச் சோ்ந்த குசேலன் (50) ஓட்டிச்சென்றாா்.

நெடுங்குணம் கிராமம் அருகேயுள்ள குளத்தின் வளைவுப் பகுதியில் பேருந்து சென்றபோது, எதிரே தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்(32) என்பவா் ஓட்டி வந்த காா், எதிா்பாராத விதமாக பேருந்து

மீது மோதியது.

காரை ஓட்டிய ரமேஷ் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், ரமேஷுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். காரில் பயணம் செய்த ராஜேஷ் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநா் குசேலன் லேசான காயமடைந்தனா்.

இதுகுறித்து குசேலன் அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.