தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பெங்களூரு சீராமபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அமமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலருமான வா.புகழேந்தி மலர் தூவி, மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சியினர் உறுதிமொழியை ஏற்றனர்.
மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன், துணைச் செயலர்கள் ராஜி,பரமேசுவரி,பரமேசுவரன், மாவட்டச் செயலர் குமார், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் வெங்கடேஷ், தொகுதிச் செயலர்கள் சுந்தரமூர்த்தி, பரசுராம், பாண்டு, செல்வம் மற்றும் ரவி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
இதேபோல், பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு அஞ்சலி நடைபெற்றது.
மேலும், தி.க. நிறுவனர் பெரியார் நினைவுத் தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


