புதுதில்லி: தங்கத்தை சுத்திகரிக்கும் மற்றும் நகை தயாரிக்கும் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறை இன்று சோதனை நடத்தியதில், அதன் பங்குகள் 5 சதவீதம் சரிந்து 'லோயர் சர்க்யூட்' நிலையை அடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு 4.99 சதவீதம் சரிந்து ரூ. 102.85 என்ற 'லோயர் சர்க்யூட்' நிலையை அடைந்தது. அதே வேளையில், நிஃப்டி-யில் 5 சதவீதம் சரிந்து ரூ. 102.12 ஆக நிறைவடைந்தது.
இருப்பினும், கடந்த ஏழு வர்த்தக அமர்வுகளில் இந்த பங்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு, 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்துடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் 'அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்' - (FEMA) கீழ் சோதனை நடத்திய மறுநாளே பங்குச் சந்தை இந்த விளக்கத்தைக் கோரியுள்ளது.
செபி சுமத்தியுள்ள மிகப்பெரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே எதிர்கொண்டு வரும் இந்நிறுவனத்திற்கு, இந்தச் சோதனை நடவடிக்கை மேலும் ஒரு சட்டச் சிக்கலாக அமைந்துள்ளது.
நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ராஜேஷ் மேத்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில், எந்தவொரு தவறும் நடக்கவில்லை என்று மறுத்திருந்தார்.
Summary
Shares of gold refining and jewellery manufacturing company Rajesh Exports tumbled 5 per cent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு வழக்கு: 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

நடிகை கெளதமியிடம் ரூ.25 கோடி மோசடி: வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரூ. 15 லட்சம் கோடி சர்ச்சை... பேசுபொருளான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்! செபிக்கு ஒத்துழைக்கத் தயார்!!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




