கொல்கத்தா: தனியார் துறை வங்கியான பந்தன் வங்கி, குறிப்பிட்ட சில நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை இன்று முதல் உயர்த்தியது. மூத்த குடிமக்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான கால அளவு கொண்ட வைப்புத்தொகைகளுக்கு, அதிகபட்சமாக 7.95 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி இந்த மாதத் தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்திலேயே மாற்றமின்றி வைத்திருந்த போதிலும், சில வங்கிகள் தங்கள் வைப்புத்தொகைத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வரும் சூழலில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கான குறைவான கால அளவு கொண்ட நிலையான வைப்புத்தொகை 7.95 சதவீத வட்டியையும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு 7.45 சதவீத வட்டியை பெறுவர்.
மூத்த குடிமக்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான கால அளவு கொண்ட நிலையான வைப்புத்தொகைகளுக்கு 7.75 சதவீத வட்டியை வழங்குவதாகவும், அதே வேளையில் மற்ற வாடிக்கையாளர்கள் 7.25 சதவீத வட்டியைப் பெறுவர் என்றது.
நிலையான வைப்புத்தொகைகளுக்கு தவிர, ரூ. 5 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ. 10 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கு வங்கி 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Summary
Private sector lender Bandhan Bank on Wednesday increased interest rates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

2025-26 நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%

கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்கவில்லை: அமைச்சா் ராஜ்மோகன்

சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் டாம்கோ கடன் திட்டத்தில் பயன்பெறலாம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




