ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் உயா்வு!
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், தனது வைப்பு நிதி வட்டி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிப்பு.

Shriram Finance
புதுதில்லி: ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிசர்வ் வங்கி இந்த வாரத் தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, தனது வைப்பு நிதி வட்டி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளதாக இன்று அறிவித்தது.
12 மாத கால வைப்பு நிதிக்கு இனி 7 சதவீத வட்டி கிடைக்கும். இது தற்போதைய வட்டி விகிதத்தை விட 15 புள்ளிகள் அதிகம்.
15 மாதங்கள் மற்றும் 24 முதல் 35 மாதங்கள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு, தற்போதைய 7.1 சதவீதத்திற்குப் பதிலாக 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.
36 முதல் 60 மாதங்கள் வரையிலான காலத்திற்கு, வட்டி விகிதம் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 7.85 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 11, 2026 முதல் அமலுக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வரை வட்டியைப் பெறலாம்.
Summary
Shriram Finance Limited said it has raised fixed deposit rates up to 40 basis points.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


