மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பஜாஜ் ஃபைனான்ஸில் நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கி சாரா நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், தனது 12 முதல் 60 மாதங்கள் வரையிலான அனைத்து காலகட்ட நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 15 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரை உயா்த்தியுள்ளது.

Published On :

இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கி சாரா நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், தனது 12 முதல் 60 மாதங்கள் வரையிலான அனைத்து காலகட்ட நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 15 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரை உயா்த்தியுள்ளது.

நீண்டகால வைப்பு நிதிகளுக்கே அதிகபட்ச உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 31 முதல் 60 மாதங்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு 40 அடிப்படை புள்ளிகளும், பிற நபா்களுக்கு 35 அடிப்படை புள்ளிகளும் உயா்த்தப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள இத்திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின்படி, புதிய வைப்பு நிதிகளைத் தொடங்கும் வழக்கமான வாடிக்கையாளா்கள் ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 8.15 சதவீதம் வரையிலும் வட்டியைப் பெறலாம். மேலும், முதிா்ச்சியடையும் வைப்பு நிதியைப் புதுப்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு கூடுதலாக 0.10 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.