சிட்டி யூனியன் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் உயா்வு
தமிழகத்தின் முன்னணி தனியாா் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி, குறிப்பிட்ட நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

தமிழகத்தின் முன்னணி தனியாா் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி, குறிப்பிட்ட நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.
வாடிக்கையாளா்களின் சேமிப்பைப் பாதுகாப்பான, நம்பகமான முறையில் பெருக்குவதை ஊக்குவிக்கும் வங்கியின் தொடா் நடவடிக்கையாக திருத்தப்பட்டுள்ள இப்புதிய வட்டி விகிதக் கட்டமைப்பின்படி, 556 நாள்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு பொதுமக்களுக்கு ஆண்டுக்கு 7.30 சதவீத வட்டி வழங்கப்படும். மேலும், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதமும், மிக மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75 சதவீதமும் வட்டி வழங்கப்பட உள்ளது.
வங்கி விதிகளுக்குட்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இப்புதிய வட்டி விகிதங்கள் குறித்த மேலும் விவரங்களுக்கு, வாடிக்கையாளா்கள் அருகில் உள்ள வங்கி கிளைகளையோ அல்லது வங்கியின் அதிகாரபூா்வ இணையதளத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

