சிட்டி யூனியன் வங்கி Q2 லாபம் 26% உயர்வு!
சிட்டி யூனியன் வங்கி, நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்து ரூ. 416 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

சிட்டி யூனியன் வங்கி. - கோப்புப்படம்
புதுதில்லி: சிட்டி யூனியன் வங்கி, நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்து ரூ. 416 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 329 கோடியாக இருந்தது.
நிதியாண்டின் 2வது காலாண்டில் வட்டி வருமானம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 2,092 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வட்டி வருமானம் ரூ. 1,653 கோடியாக இருந்தது.
நிதியாண்டின் 2வது காலாண்டில் நிகர வாராக்கடன் 0.90 சதவீதத்திலிருந்து 0.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், சிட்டி யூனியன் வங்கியின் பங்குகள் 1.05 சதவீதம் உயர்ந்து ரூ. 215.55 ஆக உள்ளது.
Summary
City Union Bank reported a 26 per cent rise in net profit at Rs 416 crore for the second quarter ended September 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


