
எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் சரிவுடன் நிறைவு!
எச்.டி.எஃப்.சி. வங்கியின் தொடக்க வர்த்தகத்தில் அதன் பங்குகள் உயர்ந்து, பிறகான வர்த்தகத்தில் 2% சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

எச்.டி.எஃப்.சி. வங்கி
மும்பை: வங்கியின் தலைமைப் பொறுப்பு மாற்றம் குறித்த தெளிவு மற்றும் வலுவான இரண்டாம் காலாண்டு வணிக அறிக்கை ஆகியவற்றால், தொடக்கத்தில் அதன் பங்குகள் உயர்ந்து, பிறகான வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாபப் பதிவு மேற்கொண்டதால் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையில், எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் 1.99 சதவீதம் சரிந்து ரூ. 705 க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. முன்னதாக, இந்த பங்கு 2 சதவீதம் உயர்ந்து ரூ. 734 ஐ எட்டியது.
நிஃப்டி-யின் தொடக்க வர்த்தகத்தில் 1.80 சதவீதம் உயர்ந்து ரூ. 734.20 ஐ எட்டியிருந்த இந்த பங்கு, பிறகான வர்த்தகத்தில் 2.27 சதவீதம் சரிந்து ரூ. 704.80 க்கு வர்த்தகம் நிறைவு செய்தது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அனுப் பாக்ச்சி நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி கடந்த வியாழக்கிழமையன்று வழங்கியது.
1992 முதல் போட்டியாளரான ஐசிஐசிஐ வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வந்த பாக்ச்சி, சஷிதர் ஜகதீஷனுக்குப் பதிலாக பொறுப்பேற்கவுள்ளார். வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 27 முதல் அவர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார். இந்த நியமனம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
Summary
HDFC Bank ended over 2 per cent lower on Monday amid profit-taking.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







