வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்!
பேடிஎம் பேமென்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட், டிஜிட்டல் வாலெட்டுகளை இயக்குவதற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியது.

பேடிஎம்
புதுதில்லி: ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், அதன் துணை நிறுவனமான பேடிஎம் பேமென்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட், டிஜிட்டல் வாலெட்டுகளை இயக்குவதற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியது.
மும்பை பங்குச் சந்தையில், இந்தப் பங்கு 1.14 சதவீதம் உயர்ந்து ரூ. 1,945 ஆக இருந்தது. இது 1.85 சதவீதம் உயர்ந்து ரூ. 1,958.80 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
நிஃப்டி-யில் இந்தப் பங்கு 0.77 சதவீதம் உயர்ந்து ரூ. 1,939.90 ஆக முடிவடைந்தது. இது 1.81 சதவீதம் உயர்ந்து ரூ. 1,960 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
2021 நவம்பர் 18-ஆம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, பேடிஎம் பங்குகள் ரூ. 1,955 என்ற விலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. அதன் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ரூ. 1,900 என்ற நிலையை எட்டியுள்ளது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1.24 கோடியாக உள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டில் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 50% உயர்ந்துள்ளது.
முன்பணம் செலுத்தும் கருவிகளுக்காக, பேடிஎம் பேமென்ட்ஸ் சர்வீசஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி கொள்கை ரீதியான அங்கீகாரத்தை இன்று (நவம்பர் 13) வழங்கியுள்ளதாக ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
பேடிஎம் நிறுவனம் தனது டிஜிட்டல் வாலெட் சேவையை 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. பின்னர், ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்க, 2017ல் இந்த வணிகத்தை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு மாற்றியது.
Summary
Paytm Payments Services Ltd has got in-principle authorisation from RBI to operate wallets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


