எம்ஆர்எஃப் Q2 லாபம் 23% சரிவு!
எம்ஆர்எஃப் லிமிடெட், அதன் நிகர லாபம் 22.8 சதவீதம் சரிந்து ரூ. 417.19 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

MRF Ltd
புதுதில்லி: டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப் லிமிடெட், இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்தபோதிலும், அதிகரித்த மூலப்பொருட்களின் விலையால் அதன் செயல்பாடு திறன் பாதித்ததால், 2வது காலாண்டில் அதன் நிகர லாபம் 22.8% சரிந்து ரூ. 417.19 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், கடந்த ஆண்டு அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 540.13 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. அதே வேளையில், கடந்த ஆண்டு இதே காலாகட்டத்தில் ரூ. 7,378.72 கோடியாக இருந்த அதன் செயல்பாட்டு வருவாய் 17.4 சதவீதம் அதிகரித்து ரூ. 8,660.19 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
கடந்த ஆண்டு ரூ. 6,788.55 கோடியாக இருந்த அதன் மொத்த செலவுகள், செப்டம்பர் காலாண்டில் 21.8 சதவீதம் அதிகரித்து ரூ. 8,269.77 கோடியானது. மூலப்பொருட்களின் விலை ரூ. 4,577.49 கோடியிலிருந்து ரூ. 6,552.57 கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பங்கு ஒன்றுக்கு ரூ. 3 இடைக்கால ஈவுத்தொகையையும், அதற்குப் பிறகு ஈவுத்தொகையை வழங்குவதற்கான பதிவுத் தேதியாக நவம்பர் 17 ஐ நிர்ணயித்துள்ளது.
Summary
MRF Ltd posted a 22.8 per cent drop in net profit to Rs 417.19 crore for the July-September quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


