புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

ஓலெக்ட்ரா கிரீன்டெக் Q2 லாபம் 5 சதவீதம் அதிகரிப்பு!

ஓலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட் அதன் நிகர லாபம் 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 52.12 கோடியாக உள்ளது.

Olectra Greentech Ltd

ஓலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட்

Updated On :

புதுதில்லி: மின்சாரப் பேருந்து தயாரிப்பு நிறுவனமான ஓலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட், நிதியாண்டின் 2வது காலாண்டில், அதன் நிகர லாபம் 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 52.12 கோடியைாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 49.43 கோடியாக இருந்தது.

அதேபோல், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.656.62 கோடியிலிருந்து ரூ.687.01 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த செலவுகள், கடந்த ஆணடுடன் ஒப்பிடுகையில் 6.5% அதிகரித்து ரூ.632.39 கோடியாக உள்ளது.

சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளுக்கான ஆர்டர் நிறுவனத்திடம் இருப்பது, எதிர்காலத்தில் அவற்றைச் செயல்படுத்துவதற்கான வணிக வாய்ப்புகள் மற்றும் வருவாய் குறித்த தெளிவான நம்பிக்கையை அளிப்பதாக தெரிவித்தார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ்.

கடந்த ஆண்டு 2வது காலாண்டில் 375 மின்சார வாகனங்களை விநியோகித்திருந்த நிலையில், நடப்பு காலாண்டில் நிறுவனம் 401 மின்சார வாகனங்களை விநியோகித்துள்ளது. இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்த ஓலெக்ட்ரா நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் புதிய பேருந்துகள், நிறுவனத்தின் புதுமை தயாரிப்பு மற்றும் விரிவாக்கப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றார்.

Summary

Electric bus maker Olectra Greentech Ltd posted 5.4 per cent growth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.