வேர்ல்பூல் இந்தியா Q2 லாபம் 40% சரிவு; வருவாய் 14% உயர்வு!!

வேர்ல்பூல் ஆஃப் இந்தியா, அதன் நிகர லாபம் 40% சரிந்து ரூ. 25.08 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

Whirlpool India Limited

Updated On :

புதுதில்லி: நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் வேர்ல்பூல் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம், நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 40% சரிந்து ரூ. 25.08 கோடியாக குறைந்திருப்பதாக இன்று அறிவித்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த வேர்ல்பூல் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான வேர்ல்பூல் ஆஃப் இந்தியா, கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் நிறுவனம் ரூ. 41.80 கோடி நிகர லாபம் ஈட்டியது.

நிறுவனத்தின் செயல்பாடு வருவாய் 2 வது காலாண்டில் 13.7% உயர்ந்து ரூ.1,873.12 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.1,647.27 கோடியாக இருந்தது.

செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவு 15% அதிகரித்து ரூ. 1,896.66 கோடியாகவும், இதர வருமானத்தையும் உள்ளடக்கிய அதன் மொத்த வருமானம் 2வது காலாண்டில் 13.77% உயர்ந்து ரூ. 1,930.96 கோடியாக அதிகரித்துள்ளது.

நிதியாண்டின் முதல் பாதியில், நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ. 1,930.96 கோடியாக உயர்ந்துள்ளது.

வேர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு, இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.838.05 என்ற விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Whirlpool of India Ltd reported a 40 per cent decline in consolidated net profit to Rs 25.08 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.