2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லாபம் 28% சரிவு!

பிடிசி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 28% மேல் சரிந்து ரூ.159.10 கோடியாக குறைந்துள்ளதாக நிறுவனம் அறிவித்தது.

பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் - (பிடிசி)

Updated On :

புதுதில்லி: அதிகரித்த செலவினங்கள் காரணமாக, செப்டம்பர் வரையான காலாண்டில், பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிடிசி) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 28% மேல் சரிந்து ரூ.159.10 கோடியாக குறைந்துள்ளதாக நிறுவனம் இன்று அறிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ.222.05 கோடி நிகர லாபம் ஈட்டியது.

இருப்பினும், நிதியாண்டின் 2வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திலிருந்த ரூ.5,585.21 கோடியிலிருந்து ரூ.5,958.24 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.5,287.25 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த செலவு, நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.5,788.97 கோடியாக அதிகரித்துள்ளது.

பிடிசி இந்தியா வெளியிட்ட அறிக்கையில், நிதியாண்டின் 2வது காலாண்டில், அதன் மின்சார வர்த்தக அளவு 24% அதிகரித்து 32.46 பில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

Summary

PTC India posted a more than 28 per cent fall in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.