தங்கம் விலையில் திடீர் திருப்பம்! மீண்டும் ஏறுமுகம்!!
சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலையால் தலைநகர் தில்லியில் தங்கம் இன்று 10 கிராமுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,46,900 ஆக நிலைபெற்றது.

தங்கம்
புதுதில்லி: சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலையால் தலைநகர் தில்லியில் தங்கம் இன்று 10 கிராமுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,46,900 ஆக நிலைபெற்றது.
99.9 சதவீதம் தூய்மையான தங்கம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று 10 கிராமுக்கு ரூ.1,46,300 என்ற விலையில் நிறைவடைந்தது. இருப்பினும், வெள்ளி இந்த மீட்சியில் இணையத் தவறியதால், அதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.1,92,500 ஆகவே இருந்தது.
குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிலையான டாலர் ஆகியவை உள்நாட்டில் தங்கத்தின் விலையை மீள உதவியது.
வெளிநாட்டு வர்த்தகத்தில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 29.69 டாலர் உயர்ந்து 4,100 அமெரிக்க டாலராகவும், வெள்ளி 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 52.58 அமெரிக்க டாலராக இருந்தது.
அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் வலுவாக இருந்தபோதிலும், பத்திர வருவாய் சரிந்த நிலையில், பதற்றங்கள் தணியும் என்ற எதிர்பார்ப்பால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அவுன்ஸ் 4,100 டாலரைக் கடந்தது.
வலுவான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் காரணமாக, ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் தொடரலாம் அல்லது டிசம்பரில் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Gold staged a modest recovery on Monday, with prices rising by Rs 600 to Rs 1,46,900 per 10 grams in the national capital.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


