
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலி: 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை!!
சென்செக்ஸ் 685.34 புள்ளிகள் உயர்ந்து 73,067.81 புள்ளிகளாகவும், நிஃப்டி 220.35 புள்ளிகள் உயர்ந்து 22,776.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

பங்குச் சந்தை - கோப்புப் படம்
மும்பை: கச்சா எண்ணெய், பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்தும், வங்கிப் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் ஏற்பட்ட முதலீட்டு அதிகரிப்பும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியதால், பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, நேற்றைய அமர்வின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இன்றும் கணிசமாக உயர்ந்து முடிவடைந்தன.
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 685.34 புள்ளிகள் உயர்ந்து 73,067.81 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 220.35 புள்ளிகள் உயர்ந்து 22,776.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ட்ரென்ட் நிறுவனம் 12.78 சதவீதம் உயர்ந்து அதிகபட்ச ஏற்றம் கண்ட பங்காக அமைந்தது. அதனை தொடர்ந்து கோடக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், எடர்னல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயரந்தும் மறுபுறம் டெக் மஹிந்திரா, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்தன.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, சந்தை உணர்வைப் பாதித்திருந்த போதிலும், பொருளாதார அழுத்தங்கள் தணித்ததால், இந்தியப் பங்குகள் இரண்டாவது அமர்விலும் தங்கள் மீட்சியைத் தொடர்ந்தன.
ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிந்தும், ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமானது.
அமெரிக்க சந்தை நேற்று உயர்வுடன் நிறைவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 4,699.14 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய ப்ரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.70 சதவீதம் சரிந்து 98.59 அமெரிக்க டாலராகக் உள்ளது.
Summary
Market benchmark indices Sensex and Nifty ended sharply higher on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







