கொச்சின் ஷிப்யார்டின் Q2 லாபம் 50% சரிவு!
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 50% சரிந்து ரூ. 53.77 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

Cochin Shipyard Ltd
புதுதில்லி: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 2வது காலாண்டில் 50% சரிந்து ரூ. 53.77 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனம், கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் ரூ. 107.52 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் மொத்த வருமானம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திலிருந்த ரூ. 1,245.88 கோடியிலிருந்து ரூ. 1,331.81 கோடியாக அதிகரித்துள்ளது.
பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட், கடந்த ஆண்டு 2வது காலாண்டில் ரூ.1,095.97 கோடியாக இருந்த அதன் மொத்த செலவு, நிதியாண்டின் 2வது காலாண்டில் அது ரூ.1,256.71 கோடியாக அதிகரித்துள்ளது.
கொச்சின் ஷிப்யார்ட், 2026-27 நிதியாண்டிற்காக, தலா ரூ.5 முகமதிப்புள்ள ஒவ்வொரு பங்குக்கும் ரூ.3 இடைக்கால ஈவுத்தொகை வழங்கவும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
Summary
Cochin Shipyard Ltd on Tuesday reported a 50 per cent decline in consolidated net profit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


