‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து...

Former Minister K.N. Nehru.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. - கோப்புப்படம்

Updated On :

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை(அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி மதிப்பிலான பணி நியமன முறைகேடு மற்றும் ஒப்பந்த முறைகோடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.என். நேரு வீடு முன்பு கூடியுள்ள திமுகவினர்

கே.என். நேரு வீடு முன்பு கூடியுள்ள திமுகவினர்

3 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தில்லை நகர் 5 ஆவது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

திருச்சி தில்லை நகரில் உள்ள வீடு உள்பட சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்.5 ஆம் தேதி நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள நேரு சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரும் நவ.16 ஆம் தேதி நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரத்தையும் தாண்டி அவரது குடும்ப உறவுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

DVAC team conducted a raid at the residence of former minister K.N. Nehru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER