லஞ்ச ஒழிப்பு சோதனை! கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் கைப்பற்றப்பட்ட 241 ஆவணங்கள்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் 241 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து...

கே.என். நேரு - கோப்புப் படம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் 241 ஆவணங்களைக் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கே.என். நேரு தொடர்பான 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை 8 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணிவரையில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் 241 ஆவணங்களும், மின்னணு சாட்சியங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 1,020 கோடி டெண்டர் ஊழல் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேலும், கே.என். நேருவின் சகோதர்கள் கே.என். ரவிச்சந்திரன், கே.என். மணிவண்ணன் உள்பட 12 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
241 documents were seized during raids conducted by the DVAC at premises linked to former DMK Minister K.N. Nehru
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



