பெங்களூரு-மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணி ஜனவரி 15-இல் தொடங்கும் என்று கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
கோவா- கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கான சாலை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, பெங்களூரு விதானசெளதாவில் கோவா மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் தவண்கருடன் ரேவண்ணா திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
கூறியது:-
பெங்களூரு-மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணி ஜனவரி 15-ஆம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளோம். நெடுஞ்சாலையில் 20 கி.மீ, இடையே ஒரு முகாம் என்ற வகையில் 11 முகாம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறும்.
நெடுஞ்சாலை பணிகளுக்கு 30 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளபோதிலும், 24 மாதங்களில் பணிகளை முடித்து தருவதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார்.
பெங்களூரு-மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ. 3451 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூ. 3 ஆயிரம் கோடியும் செலவிடப்படும்.
பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கு வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
கோவா-கர்நாடகம் இடையே உள்ள சாலைப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கோவா-கர்நாடகம் எல்லைகள் இடையே உள்ள சாலைகளை மேம்படுத்துவது குறித்து, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். கர்நாடக மாநிலம் பெலகாவி, ஹுப்பள்ளியிலிருந்து கோவாவுக்கு நாள்தோறும் 3 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன என்றார் ரேவண்ணா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


