பியூ கல்லூரிகளில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
பியூ கல்லூரிகளில் போதுமான விரிவுரையாளர்கள் இல்லாததால், மாணவர்களின்கல்வியை வெகுவாக பாதித்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்தப் பிரச்னையை சமாளிக்க பியூ கல்லூரிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
நிகழ் கல்வியாண்டில் 2,997 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதோடு, அவர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த ஆண்டில் மார்ச் மாதம் வரை பணியில் அமர்த்தப்படுவார்கள்.
தென் கன்னட மாவட்டத்தில் 217, மைசூரில் 154, ஹாசனில் 150, பெங்களூரு தெற்கில் 30, பெங்களூரு வடக்கில் 34, பெங்களூரு ஊரகத்தில் 40, குடகு மாவட்டத்தில் 44 கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவிருக்கிறார்கள்.
காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வுகளை நடத்திய கர்நாடகதேர்வு ஆணையம், ஒருசில சட்டத்தடங்கல்களால் அதை தொடர முடியவில்லை.
இந் நிலையில், தற்போது விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நுழைவுத்தேர்வை நடத்த புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு நிறைவடைந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேழ்வரகு அறுவடை செய்து அமைச்சா் துரைமுருகன் மருமகள் வாக்கு சேகரிப்பு

சீனாவின் விஷமத்தனம்...

இலக்கை எட்டுகிறது மகளிர் இடஒதுக்கீடு!

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் வளா்ச்சிப் பணிகள்: அரூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

