4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

"கூட்டுறவு வங்கிகளின் பயனை தலித் மக்கள் பெற வேண்டும்'

மாநில அளவில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் தலித் மக்கள் பயனடைய வேண்டும் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி. தேவெகெளடா தெரிவித்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:22 am IST

மாநில அளவில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் தலித் மக்கள் பயனடைய வேண்டும் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி. தேவெகெளடா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் விவிதோத்ஷா சேவா அமைப்பின் சார்பில் நடைபெற்ற 6-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிடைக்கும் பயனை வீர சைவர், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெற்று முன்னேறியுள்ளனர்.
அதேபோன்ற பயனை தலித் மக்களும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். கூட்டுறவு வங்கிகளால் தலித் சமுதாயத்தினர் மட்டுமின்றி மகளிர், மாணவர்கள், விவசாயிகள் பயனடைய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை மாநில அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு வங்கிகளின் பயனை பெரிதளவில் பெற்ற சீனா போன்ற நாடுகள்கூட அதனை மக்களிடத்தில் பரவலாக்குவதில் தோல்வி அடைந்து விட்டன.  ஆனால், இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் மக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன என்றார் அவர். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் துருவநாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.