நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி (34 வயது) ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல்முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வரலாற்றிலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் பந்துவீச்சில் டெஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி 11 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். இந்த அபாரமான பந்துவீச்சினால் அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வரலாற்றிலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் பந்துவீச்சில் முதலிடம் பிடித்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நியூசிலாந்தின் ஜாக் கோவி (1947), ரிச்சார்ட் ஹாட்லீ (1984-1990) ஐசிசி டெஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளார்கள். தற்போது, 36 ஆண்டுகளுக்குப் பிறகு மாட் ஹென்றி இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை
1. மாட் ஹென்றி - 870 புள்ளிகள்
1=. ஜஸ்ப்ரீத் பும்ரா - 870 புள்ளிகள்
3. மிட்செல் ஸ்டார்க் - 838 புள்ளிகள்
4. பாட் கம்மின்ஸ் - 832 புள்ளிகள்
5. மார்கோ யான்சென் - 825 புள்ளிகள்
Summary
Thirty-six year rankings drought over for Newzealand, Matt henry with Bumrah two new No.1s crowned
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஹாரி ப்ரூக்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் வங்கதேச வீரர்கள் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பும்ரா, ஜடேஜா முதலிடம்..! டாப் 10 பட்டியலில் ஜெய்ஸ்வால், கில்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




