விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

ஐசிசி தரவரிசை: பும்ரா உடன் பகிர்ந்துகொண்ட முதலிடத்தை இழந்தார் மாட் ஹென்றி!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட பும்ரா குறித்து...

News image

ஜஸ்ப்ரீத் பும்ரா - படம் | AP

Updated On :1 ஜூலை 2026, 7:50 pm IST

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்ட நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி தற்போது இரண்டாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-1 என வென்றது. இதனால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடிக்க, ஹாரி புரூக் கீழிறங்கினார்.

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றன. இதனால், பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், ஜஸ்பிரீத் பும்ரா தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வரலாற்றிலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் பந்துவீச்சில் டெஸ்ட்டில் முதலிடம் பிடித்திருந்தார். அந்த சாதனை சிறிது நாள்களிலே நீடித்தது.

டாப் 10ல் பந்துவீச்சில் பெரிதாக மாற்றங்களே நிகழ்வில்லை. ஷமேர் ஜோசப் 9 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தை இருவருடன் பகிர்ந்துகொண்டார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை

1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 870 புள்ளிகள்

2. மாட் ஹென்றி - 861 புள்ளிகள்

3. மிட்செல் ஸ்டார்க் - 838 புள்ளிகள்

4. பாட் கம்மின்ஸ் - 832 புள்ளிகள்

5. மார்கோ யான்சென் - 825 புள்ளிகள்

Summary

ICC Rankings: Matt Henry loses the top spot he shared with Bumrah!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.