ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த டிராவிஸ் ஹெட்..! 6ஆவது இடத்தில் ஷுப்மன் கில்!

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியல் குறித்து...

Australia’s Travis Head celebrates reaching his century (100-runs) on day three of the fifth Ashes cricket Test between Australia and England at the Sydney Cricket Ground in Sydney on January 6, 2026. (Photo by Saeed KHAN / AFP)

டிராவிஸ் ஹெட் - AFP

Published On :1 ஜூலை 2026, 6:46 pm IST

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்டர் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

முன்னதாக, முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஹாரி புரூக் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சுமாராக விளையாடியதால் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் இன்று அப்டேட் செய்யப்பட்டது. இதில், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றமும் இங்கிலாந்து வீரர்கள் கீழிறக்கமும் கண்டார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை நியூசிலாந்து 2-1 என வென்றது. இதனால், தரவரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இங்கிலாந்து வீரர்களின் தரவரிசை குறைந்தது.

ரச்சின் ரவீந்திரா 2 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்திலும் டேரில் மிட்செல் 5 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்திலும் டெவான் கான்வோ 14 இடங்கள் தாவி, 15ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஐசிசி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியல்

1. டிராவிஸ் ஹெட் - 853 புள்ளிகள்

2. ஹாரி புரூக் - 852 புள்ளிகள்

3. ஜோ ரூட் - 840 புள்ளிகள்

4. ஸ்டீவ் ஸ்மித் - 831 புள்ளிகள்

5. டெம்பா பவுமா - 775 புள்ளிகள்

6. ஷுப்மன் கில் - 743 புள்ளிகள்

7. ரச்சின் ரவீந்திரா - 740 புள்ளிகள்

8. கமிந்து மெண்டிஸ் - 737 புள்ளிகள்

9. யஷஷ்வி ஜெய்ஸ்வால் - 733 புள்ளிகள்

10. தினேஷ் சண்டிமால் - 725 புள்ளிகள்

Summary

Travis Head dethrones Harry Brook to become world's No. 1 ICC rankings in Test, Shubman Gill at No.6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.