நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பெற்றுள்ள வெற்றி, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கப்போகும் வெற்றிக்கான முன்னோட்டமாகும். மக்களவைத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பது ஏற்கெனவே எதிர்ப்பார்த்ததுதான்.
பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் பதிவாகியுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெற்றுள்ள வெற்றி, 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கப்போகும் வெற்றிக்கான முன்னோட்டமாகும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு 325 வாக்குகள் கிடைத்துள்ளதைக் கவனித்தால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதைவிட அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என்பது உறுதியாகியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்கூட மக்களவைத் தேர்தலில் முன்வைக்கப்படவுள்ள பிரச்னைகளை வெளிப்படுத்தின.
மக்களவைத் தேர்தல் பாஜகவின் நேர்மறையான செயல் திட்டத்துக்கும் எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான செயல் திட்டத்துக்குமான போராட்டமாக இருக்கும்.
தேசிய ஜனநாயக கட்சி அரசின் குறிப்பிடத்தக்க சாதனைகளின் அடிப்படையில் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்தையும் தாண்டி வெற்றி பெறும்.
மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்துகொண்ட விதம் குழந்தைத்தனமாக இருந்தது.
ராகுல் காந்தி மீது நாட்டு மக்களின் சந்தேகங்களை அவரது நடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றும். நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் போா் அதிகாரங்கள் தீா்மானம்: அமெரிக்காவில் நிறைவேற்றம்

ரோட்டரி கிளப் சாா்பில் ரத்ததான வாகனம்

மேற்கு வங்கத்தில் ‘சைவ திணிப்பு’: பாஜக அரசு மீது திரிணமூல் குற்றச்சாட்டு
‘இணையவழி குற்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை’
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


