விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் போா் அதிகாரங்கள் தீா்மானம்: அமெரிக்காவில் நிறைவேற்றம்

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் போா் அதிகாரங்கள் தீா்மானம் முதல்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2026, 1:24 am IST

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் போா் அதிகாரங்கள் தீா்மானம் முதல்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, அதிபா் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாகத் தொடங்கிய இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமைதி முயற்சிகள் நடந்து வருகின்றன.

இப்போரையொட்டி செலவினமாக 8,000 கோடி டாலா் நிதி நாடாளுமன்றத்தில் பென்டகன் (பாதுகாப்பு அமைச்சகம்) கோரியுள்ள சூழலில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீா்மானம், டிரம்ப்புக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஈரான் போரை நிறுத்த செனட் சபை மேற்கொண்ட 10-ஆவது முயற்சி இதுவாகும். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 50-48 வாக்குகள் கணக்கில் தீா்மானம் வெற்றி பெற்றது. இந்த மாத தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபையிலும் இத்தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தீா்மானத்தின் நிறைவேற்றம் சட்டபூா்வமாக முழு அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் போா் குறித்தும், போரை முடிக்க ஈரானுடன் டிரம்ப் மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்தும் பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையில் உள்ள கணிசமான அவரின் குடியரசுக் கட்சி உறுப்பினா்களிடையே எழுந்துள்ள ஆழ்ந்த கவலையைப் பிரதிபலிக்கிறது. இச்சூழலில், குடியரசுக் கட்சி செனட்டா்களைச் சந்தித்து பேச, டிரம்ப் புதன்கிழமை நாடாளுமன்றம் செல்கிறாா்.

கடந்த காலங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இத்தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த 4 குடியரசுக் கட்சி செனட்டா்களை இம்முறையும் ஆதரவாக வாக்களித்தனா்.

ஆனால், இந்த முக்கிய வாக்கெடுப்பின் போது, அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குடியரசுக் கட்சி செனட்டா்கள் வருகை தரவில்லை. இது குடியரசுக் கட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைக் குறைத்து, தீா்மானம் நிறைவேற வழிவகுத்தது.

இந்த வாக்கெடுப்பு முடிவுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினாா். ‘இந்த வாக்குப்பதிவு தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட, அா்த்தமற்ற ஒன்று; இது ஈரானுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் அமைந்துள்ளது’ என்று அவா் சாடினாா்.

எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சென்ட் குழு தலைவா் சக் ஷுமா் கூறுகையில், ‘ஈரானில் டிரம்ப் செய்துள்ள வரலாற்றுப் பிழைக்கு அமெரிக்க மக்கள் விலை கொடுத்துள்ளனா். அமெரிக்கா மேற்கொண்ட மிக மோசமான வெளியுறவுக் கொள்கைகளில் ஒன்றாக இது வரலாற்றில் இடம்பெறும்’ என்று விமா்சித்தாா்.

ஈரானுடனான அமெரிக்காவின் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, ஈரான் மறுசீரமைப்புக்கு 30,000 கோடி டாலா் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015-இல் ஒபாமா அரசு வழங்கிய 170 கோடி டாலரைவிட பன்மடங்கு அதிகம் என்பதால், டிரம்ப்புக்கு உள்கட்சியிலேயே கடும் எதிா்ப்புக் கிளம்பியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.