விவிபேட் கருவிகள் அடங்கிய பெட்டிகள் விவகாரத்தில், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் விளக்கம்அளித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்முறையாக மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கக்கூடிய விவிபேட் கருவியின் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி வாக்களித்ததை வாக்காளர்கள் உறுதி செய்துகொள்வதற்காக வாக்குப்பதிந்த சின்னத்தை 7 நிமிடங்கள் மட்டும் காட்சிப்படுத்துவதற்காகவே விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 9 நாள்களான பிறகு, விஜயபுரா மாவட்டத்தின் பசவனபாகேவாடி வட்டத்தின் மனகுலி கிராமத்தில் 8 விவிபேட் கருவிகள் தேசிய நெடுஞ்சாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையில் கண்டுபிடிக்கப்பட்டன. விவிபேட் கருவிகளில் வாக்குச் சீட்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சட்டப்பேரவையில் தோற்ற வேட்பாளர்கள் இதுகுறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளதோடு, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து மனகுலி கிராம காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: விஜயபுரா மாவட்டத்தின் பசவனபாகேவாடி வட்டத்தில் உள்ள மனகுலி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விவிபேட் கருவிகள் விஜயபுரா மாவட்டத்துக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ சொந்தமானதல்ல. மனகுலி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 8 விவிபேட் கருவிகளில் இயந்திரமும், காகிதங்களும் இல்லை. மேலும், அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தனிச் சிறப்பு வாய்ந்த மின்னணு எண்ணும் அவற்றில் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் குழப்பத்தை விளைவிக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக, மே 20-ஆம் தேதி தொலைக்காட்சியில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை விஜயபுரா மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
விவிபேட் பெட்டிகள் இருந்ததே தவிர, அங்கு அதன் கருவிகள் எதுவும் இல்லை. 3 பெட்டிகள் விஜயபுரா மாவட்டத்துக்கு சொந்தமானதல்ல. விஜயபுரா மாவட்டத்துக்கு 2,744 விவிபேட் கருவிகள் ஒதுக்கப்பட்டு, அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 91% வாக்குப் பதிவு!

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

