பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஞானபாரதி வளாகத்தில் அமைந்துள்ள பெங்களூரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் முதுநிலை பட்டயம், பட்டயம், சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள் வருமாறு: முதுநிலை பட்டயப்படிப்பு-அம்பேத்கர் சிந்தனை, கிளினிக்கல் எம்ப்ரையாலஜி அண்ட் அஸ்சிஸ்டட் ரீபுரடெக்டிவ் டெக்னாலஜி, மதநல்லிணக்கம் மற்றும் சமூக அமைதி, பயன்பாட்டு இந்தி, திரைப்பட நடிப்பு, காந்திய சிந்தனைகள், புவிசார் தகவலியல், இந்திமொழியாக்கம், சுவடியியல், மனநலவியல் ஆலோசனை, ஊரக மேலாண்மை, சுற்றுலா மற்றும் அருங்காட்சியகவியல், காண்கலை, யோகா சிந்தனைகள், பட்டயப்படிப்புகள்- சமஸ்கிருதம், உருது, சான்றிதழ் படிப்புகள்-தாழ்த்தப்பட்டோர் இயக்கம், காந்திய சிந்தனைகள், யோகா பயிற்றுநர். ஒவ்வொரு படிப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
மாணவர்களுக்குத் தங்கும் விடுதி வசதியும் உண்டு. ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தகுதி, இட ஒதுக்கீடு, கட்டணம் குறித்து அறியவும், விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கம் செய்துகொள்ளவும் www.bangaloreuniversity.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம். விண்ணப்பப்படிவ கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.200, தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கு ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை அபராதமின்றி நவ.12-ஆம் தேதிக்குள், ரூ.200 அபராதத்துடன் நவ.14-ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.
தகுதியான மாணவர்களின்பட்டியல் நவ.15-ஆம் தேதி வெளியிடப்பட்டு, நவ.16-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டு, நவ.19-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன என்று
அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பா... மகனே...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


