நிலத்தை அளக்கவும், பள்ளிக்கு உரிமத்தைப் புதுப்பிக்கவும் லஞ்சம் பெற்ற நில அளவையர், கல்வித் துறை அதிகாரி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஊரகம், தேவனஹள்ளி வட்டம், நாராயணபுரா கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது நிலத்தை அளந்து தருமாறு மனு அளித்துள்ளார். இதற்கு தேவனஹள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நில அளவையர் ரங்கசாமி ரூ. 1.5 லட்சம் லஞ்சம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.
முதல் தவணையாக ரூ. 30 ஆயிரம் லஞ்சப் பணத்தை சனிக்கிழமை ரங்கசாமியிடம், அந்த நபர் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து ரங்கசாமியிடம் பெங்களூரு லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு வழக்கு: அதேபோல கோலார் மாவட்டம், தங்கவயலில் உள்ள தனியார் பள்ளியின் உரிமத்தை புதுப்பிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கல்வித்துறை அதிகாரி சுரேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து கோலார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


