முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் மேலும் ஒருவர் பலியானது குறித்து...

News image

அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனை - எக்ஸ்

Updated On :25 ஜூன் 2026, 8:11 am IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.

இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது.

இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 25) உயிரிழந்தார். இதனால் அமோனியா வாயு கசிந்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Summary

Thiruvallur Ammonia leak incident Death toll rises to 11

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.